குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விசேட நீதிமன்றங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இயங்க ஆரம்பிக்கும் என பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த நீதிமன்றங்கள் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசேட நீதிமன்றம் அமைப்பது குறித்து நீதி அமைச்சர் தலதா அதுகோரளவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.