155
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்து காணப்பட்டவர் 22 வயதான அன்ரன் உதயராஜ் டிலக்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று காலை குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போதே குறித்த பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக இளவாலை காவல்துநையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love