ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற இரு மக்களவை தொகுதிகளில் காங்கிரஸூம், மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸூம் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் வெற்றிடமாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளுக்கு ஜனவரி 29ம் திகதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் எதிர்கட்சியான காங்கிரஸ் முன்னணியில் உள்ளதென தெரிவிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் பாஜக முன்னணி வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இடைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.