ஜப்பானில் முதியோர் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் சப்போரோ பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முதியோருக்காக செயற்படுகின்ற முதியோர் இல்லதி;திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மூன்று தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் 16 முதியோர்கள் தங்கியிருந்தநிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது விரைவாக பரவியதனால் அதில் சிக்கிக் கொண்ட முதியவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமைகளில் அனுமதரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.