குளோபல் தமிழ்ச் செய்திகள்
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததை அடுத்து பாதுகாப்பு பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி வருகை தந்து இருந்தார். அவரின் வருகையை முன்னிட்டு யாழ்.நகர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய விசேட காவல்துறை அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்தனர். அதேவேளை கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கான பிரதான பாதுகாப்பு பணியில் முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவே (Ex PSD) பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்தனர்.
அத்துடன் மேடையில் முன்னாள் ஜனாதிபதி உரைநிகழ்த்தும் இடத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்டு இருந்தன. முன்னாள் ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது இ குண்டு துளைக்காத பாதுகாப்பு அங்கி அணிந்த பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு வழங்கினார்கள்.