குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலந்தில் சர்ச்சைக்குரிய சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நாசி அழிவுகள் தொடர்பில் போலந்து அரசாங்கத்தையோ அல்லது நாட்டையோ குற்றம் சுமத்தக்கூடாது என்ற வகையில் இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாசி அழிவுகள் அல்லது ஹோலாகொஸ்ட் தொடர்பில் போலந்தை தொடர்பு படுத்தி கருத்து வெளியிடுவோர், குற்றம் சுமத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு அபராதம் அல்லது மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரலாற்று உண்மையை உறுதி செய்வதற்கான உரிமை போலந்துக்கு உண்டு என அந்நாட்டு
ஜனாதிபதி அன்ட்ரெஸ் டுடா (Andrzej Duda) தெரிவித்துள்ளார்.
நாசி அழிவுகளுக்கு போலந்தும் பொறுப்பு என எவரேனும் குற்றம் சுமத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.