தென்னாபிரிக்காவில் 3,280 அடி ஆழம் இருக்கும் சுரங்கம் ஒன்றில் 950க்கும் அதிகமான தொழிலாளர்கள் அகப்பட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்க உற்பத்தியில் உலகில் முக்கிய இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவில் ஒவ்வொரு வருடமும் மிகவும் அதிக அளவில் தங்க உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அதேவேளை அங்கு உள்ள தங்கச் சுரங்கங்கள் மிகவும் மோசமானதாகவும் பாதுகாப்பின்றிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் அங்குள்ள வெல்கம் டவுன் என்ற பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் 950க்கும் அதிகமான தொழிலாளர்கள் அகப்பட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 3,280 அடி ஆழம் இருக்கும் சுரங்கத்தில் கடந்த புதன்கிழமை முதல் தொழிலாளர்கள் அகப்பட்டுக் கொண்டுள்ளதாகவும் தற்போது மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடுமையான புயல் வீசியமையினால் அந்த பகுதியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதனால் சுரங்கத்தில் இருந்து மேலே வரும் லிப்ட் வேலை செய்யாமல் தொழிலாளர்கள் அகப்பட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு அகப்பட்டுள்ளவர்களுக்கான உணவும் நீரும் வழங்கப்பட்டபோதும் தேவையான அளவு ஒக்சிசன் வழங்குவதில் சிரமங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது
இந்தநிலையில் மீண்டும் இன்று மின்சார விநியோகம் வழங்கப்பட்டு தற்போது பெரும்பாலோனோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது உடல்நிலையில் பாதிப்புக்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.