குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சீனா இலங்கையில் பொருளாதார ரீதியிலான மிரட்டலை மேற்கொண்டு வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் வலுப்பெற்று வருவதாக, இந்திய சீன உறவுகள் தொடர்பிலான சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் ஏற்படாத போதிலும் அடிக்கடி முரண்பாட்டு நிலைமைகள் உருவாகும் எனவும், இந்தியாவின் அண்டை நாடுகளை நட்பாக்கிக் கொண்டு இந்தியாவை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் தந்திரோபாயத்தை சீனா முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
1 comment
இந்தியாவின் அண்டை நாடுகள் இந்தியாவின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொண்டு சீனாவுடன் நட்பு உறவுகளை வலுப்படுத்தி வருவது இந்தியாவை நெருக்கடிக்குள் ஆழ்த்துகின்றதாம் என்று அண்டை நாடுகளுக்கு மிரட்டல் விடுகின்றான் இந்த எம்.கே. நாராயண்
இவன் தமிழர்களை அழிக்க முன்நின்று போரை வழி நடத்தியவன். யுத்தம் 2009 ல் முடிவடைந்த பின்னர், தமிழர்களுக்கு என்ன தீர்வு என்பது இந்தியாவுக்குத் தெரியும், தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தியவன்.
இவனைப் போன்ற நபர்களின் அறிவுரை இந்திய நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் எந்த நன்மைகளையும் கொடுக்காது.