180
பலதரப்பினரின் எதிர்ப்புகளுக்கு இடையில் 150 கோடி ரூபாயை வசூலித்துள்ள ’பத்மாவத்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தி மட்டுமே மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவை முன்னிலைப்படுத்தி இந்தப் படம் தயாரிக்கப்பட்டு, பெரும் வெற்றியும் பெற்றுள்ளது.
பத்மாவத் படத்துக்கு பல்வேறு தகுதிகளின்கீழ் சில விருதுகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ள நிலையில், தீபிகா படுகோனே-வை பாலிவுட் சூப்பர் ஸ்டார் பாராட்டு மழையால் குளிர்வித்துள்ளார்.
தனது நடிப்பை பாராட்டி அமிதாப் பச்சன் தன் கைப்பட முகவரியிட்டு அனுப்பிய கடிதத்தை தனது ‘இன்ஸ்ட்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள தீபிகா படுகோனே, ‘பல விருதுகள் இருக்கலாம். பல வெகுமதிகள் இருக்கலாம். ஆனால், எனக்கு இதைவிட பெரியது எதுவும் கிடையாது. இதற்கு நன்றி பாபா!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Spread the love