குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது அறிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு காலி முகத் திடலில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. திருகோணமலையில் நாளைய தினம் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து இரா.சம்பந்தன், சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதேவேளை, சில தமிழ் அரசியல் கட்சிகள் நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் கறுப்பு கொடிகளை ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.