Home இலங்கைமாலைதீவில் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்து

மாலைதீவில் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்து

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலைதீவில் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மாலைதீவில் அரசியல் பதற்ற ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மாலைதீவின் அனைத்து தரப்பினரும் சட்டம் ஒழுங்களை நிலைநாட்டி ஜனநாயக வழிகளில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. மாலைதீவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More