பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதிமன்றம் இன்றைய தினம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. இரண்டு பேரினதும் விளக்க மறியல் காலம் இந்த மாதம் 16ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் நேற்றைய தினம் குற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
3ஆம் இணைப்பு – அர்ஜூன் அலோசியஸ் – கசுன் பலிசேன மீண்டும் இன்று நீதிமன்றில்
Feb 5, 2018 @ 05:11
மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் ; நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர்,இன்று முற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று கைது செய்திருந்த நிலையில் இன்று நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றையதினம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்றைய தினம் இருவரினதும் இல்லங்களில் திடீர் சுற்றி வளைப்பு நடத்தி இந்த கைதுகளை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலோசியஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி பலிசேன ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் மற்றுமோரு பிரதான சந்தேக நபரான அர்ஜூன் மகேந்திரன் தற்போது நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2ஆம் இணைப்பு – அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேனவை விளக்க மறியலில் வைக்க உத்தரவு..
Feb 4, 2018 @ 19:14
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அர்ஜூன் அலோசியஸ் கசுன் பலிசேன கைது..
Feb 4, 2018 @ 04:14
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற விசாரணைப் பிரிவினர் இன்றைய தினம் இருவரினதும் இல்லங்களில் திடீர் சுற்றி வளைப்பு நடத்தி இந்த கைதுகளை மேற்கொண்டுள்ளனர்.
வெள்ளவத்தையில் அமைந்துள்ள பலிசேனவின் வீட்டையும், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலோசியஸின் வீட்டையும் குற்ற விசாரணைப் பிரிவினர் சுற்றி வளைத்து இந்த கைதுகளை மேற்கொண்டுள்ளனர். மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலோசியஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி பலிசேன ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமோரு பிரதான சந்தேக நபரான அர்ஜூன் மகேந்திரன் தற்போது நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.