உலகிலேயே முதல்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பிரத்யேக யுடியூப் சனல் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் வருடமும் பெப்ரவரி 4ம் திகதி சர்வதேச புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, குணப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் நடப்பாண்டுக்கான புற்றுநோய் வாகமாக ‘நம்மால் முடியும்; என்னால் முடியும்’ என்று அறிவித்துள்ள நிலையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இந்த பிரத்யேக யுடியூப் சனல் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
2020-ல் இந்தியாவில் ஏறத்தாழ பதினேழரை லட்சம் புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவார்கள் எனவும், புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 8.80 லட்சமாக இருக்கும் எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வைத்தியர் பி.குகன் என்பவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 60 முதல் 70 சதவீதம் நோயாளிகள் முற்றிய நிலையிலேயே மருத்துவர்களை அணுகுகின்றனர் எனவும் இதனால் அவர்களைக் காப்பாற்றும் வாய்ப்புகள் குறைகின்றன . எனவே இந்த பிரத்யேக யுடியூப் சனல் மூலம விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.