மேற்கு ஆபிரிக்க கடற்பகுதியில் உள்ள கயானா வளைகுடாவில் 22 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலோ ஈஸ்டர்ன் என்ற கம்பெனிக்கு சொந்தமான கப்பல் 8.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பெட்ரோலுடன் சென்று கொண்டிருந்த போது கடந்த முதலாம் தினதி முதல் காணாமல் போயிருந்தது
இந்நிலையில், குறித்த கப்பலை பணயத் தொகையை செலுத்திய பிறகு கடற்கொள்ளையர்கள் கப்பலை இன்று விடுவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கயானா வளைகுடாவில் 22 மாலுமிகளுடன் சென்ற கப்பல் மாயம்
Feb 4, 2018 @ 05:07
மேற்கு ஆபிரிக்க கடற்பகுதியில் உள்ள கயானா வளைகுடாவில் 22 இந்திய மாலுமிகளுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதனால் கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலோ ஈஸ்டர்ன் என்ற கம்பெனிக்கு சொந்தமான இந்தக் கப்பல் 8.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பெட்ரோலுடன் நிலை நின்று கொண்டிருந்ததாகவும் மூன்று நாட்களாக அந்த கப்பலில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காணமல் போனவர்களின் குடும்பத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்பே முதன்மையான பணி எனவும் அங்கிலோ ஈஸ்டர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.