குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தமிழ் பத்திரிக்கைகள் இரண்டை முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச வாங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். கரவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் வீட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற பரப்புரை கூட்டத்திலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு தமிழ் பத்திரிக்கைகளை மஹிந்த ராஜபக்ச வாங்கிவிட்டார். அந்த தகவல் இன்று காலை (நேற்று) தான் கிடைத்தது. என தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ் வரும் போது கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர்கள் முன்னாள் ஜனாதிபதி வந்த போது எங்கே சென்றார்கள் என கேள்வி எழுப்பினார்