141
முன்னாள் தென்கொரிய ஜனாதிபதிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் 5வருட சிறைத் தண்டனை பெற்றிருந்த சாம்சங் தலைவர் லீ ஜே யங்க் ( Lee Jae-yong ) விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தடையை நீக்கியுள்ள தென் கொரிய மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த வருடம் லீ ஜே யங்க் உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் குய்ன் ஹை( Park Geun-hye ) க்கு லஞ்சம் கொடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
உலக அளவில் மிகவும் பிரபலமாகத் திகழும் சாம்சங் குழும சொத்துக்களனி; வாரிசுகளில் லீ ஜே யங்க் கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love