198
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவை தலைமுடி மீது நடந்து செல்ல கோரியவர்கள் யாழ்ப்பாண பெண்கள் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்தார். யாழில்.இன்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
1960ஆம் ஆண்டு கால பகுதி என நினைக்கிறேன். சிறிமோவோ பண்டார நாயக்க யாழ்ப்பாணம் வந்த போது இங்குள்ள பெண்கள் தமது தலை முடியை விரித்து மண்டியிட்டு இருந்து தமது தலைமுடி மீது நடந்து செல்லுங்கள் என சொன்னார்களாம். அவ்வாறு வரவேற்பளித்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள்.
ஆனால் சிறிமாவோ பண்டாரநாயக்கவை அவ்வாறு வரவேற்பது மகிழ்ச்சி. ஆனால் தமிழ் தாய்மார்களின் தலைமுடி மீது கால் வைத்து நான் நடக்க மாட்டேன் என தெரிவித்தார்.
Spread the love