209
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியலுக்காக மக்களை பிரிக்க வேண்டாம். நாங்கள் சமாதானமான சமூகமாக இந்த நாட்டில் வாழ வேண்டும். என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார். யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும்தெரிவிக்கையில்
எனக்கு ஒரு கனவு உண்டு அதனை நனவாக்கக எனக்கு உதவுங்கள். அது என்னவெனில் இந்த நாட்டில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லீம் பறங்கியர் என அனைத்து சமூகங்களும் ஒன்றாக சகோதரர்களாக கைகோர்த்து பயம் சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும் அதுவே என் கனவு.
எனவே வடக்கு கிழக்கு தலைவர்களிடம் கோருகிறேன். உங்கள் அரசியலுக்காக மக்களை பிரிக்க வேண்டாம். நாங்கள் சமாதனமான சமூகமாக இந்த நாட்டில் வாழ வேண்டும்.
எனக்கு எப்போதும் உங்களுடன் நெருக்கமாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். அது சிலருக்கு பிடிக்க வில்லை. நான் ஜனாதிபதி என உங்களுக்கு சேவையாற்ற விரும்பிகின்றேன். அதற்கு உங்களுக்கும் எனக்கும் ஒரு பாலம் அமைக்க ப்பட வேண்டும். அதனை பெப்ரவரி 10ஆம் திகதி அமைத்து தாருங்கள்.
தேர்தலில் வென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்கள் தனியே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டும் சேவையாற்ற கூடாது. அனைத்து மக்களுக்கும் தமது சேவைகளை ஆற்ற வேண்டும். வாக்குகளை மக்கள் தந்தாலும் தரா விட்டாலும் அனைவருக்கும் சேவையாற்ற வேண்டும். அது தான் சமவுரிமை. சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை எமது மதங்கள் சொல்ல தந்துள்ளன. அதன் பிரகாரம் நடவுங்கள்.
நாங்கள் நன்றாக சேவை செய்தால் இறைவனின் ஆசி எமக்கு கிடைக்கும். அரசியல் செய்யும் போது களவாட கூடாது. மக்களின் பணத்தை களவு செய்ய கூடாது. ஏழை மக்களுக்கு சேவை செய்ய ஒதுக்கப்பட்ட பணத்தை கடந்த காலங்களில் சில அரசியல் வாதிகள் கையாடல் செய்துள்ளனர். அவ்வாறு செய்ய கூடாது என மேலும் தெரிவித்தார்
Spread the love