167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப்பில் குளோரின் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் செறிந்து வாழும் பகுதியில் குளோரினைக் கொண்டு நிரப்பப்பட்ட குண்டுகளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 9 பேர் காயமடைந்துள்ளனர்.
அரசாங்க ஹெலிகொப்டர் ஒன்றினைப் பயன்படுத்தி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை, ரஸ்ய விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Spread the love