குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2015ம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், நீதிமன்றம் பக்கச்சார்பானது என குற்றம் சுமத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே சந்தேக நபரான சலா அப்டேசலம் ( Salah Abdeslam )என்பவரே இவ்வாறு நீதிமன்றில் எதனையும் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பெல்ஜிய நீதிமன்றில் சலா அப்டேசலமுக்கு எதிரான வழக்கு விசாரணைக் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தாம் நீதிமன்றில் நீதிபதி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தமது மௌனம் தாம் குற்றவாளி என்பதாக அர்த்தப்படாது எனவும், நீதிமன்றில் எதனைப் பேசினாலும் அதில் பயனில்லை என்பது தமக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் மிகவும் கடுமையாக நடத்தப்படுவதாகவும் இரக்கமின்றி துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் நீதிபதிக்கோ அல்லது வேறு தரப்பினருக்கோ அஞ்சப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.