180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுவின் சுவரொட்டிகள் ஒட்டிய குற்ற சாட்டில் இருவர் நேற்று திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொக்குவில் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு இருந்த வேளை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 50 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love