194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு ஏழு பேர் அடங்கிய குழுவொன்று டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளைய தனம் இந்த குழுவினர் டுபாய்க்கு பயணம் செய்ய உள்ளனர்.
அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் வேளையில் டுபாயில் வைத்து உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல் தறையினர் கைது செய்திருந்தனர். மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இவ்வாறு உதயங்க வீரதுங்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
Spread the love