166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
இலங்கைக்கு பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை விமான நிலையத்தில் வைத்து இந்த இரண்டு பிரான்ஸ் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சிலையுடன் இந்த இரண்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் இந்த விலை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சிலையானது தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love