குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
உதயங்க வீரதுங்கவை காப்பாற்றும் முயற்சிகளில் உக்ரேய்ன் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தற்பொழுது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, உக்ரேய்னுக்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளது. மிக் ரக விமான கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்யப்பட்டதாக உதயங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உதயங்க வீரதுங்க உக்ரேய்ன் குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ள நபர் எனவும், எனவே அவரை நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறும் உக்ரேய்ன் கோரியுள்ளது. டுபாய் அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உதயங்கவை கைது செய்வதற்கு விசேட காவல்துறை குழுவொன்று டுபாய்க்கு பயணம் செய்ய உள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.