164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை தாம் புறக்கணிக்க உள்ளதாக வடமாகாண தொண்டராசியர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த பல வருடங்களாக எமக்கு நியமனம் பெற்று தருமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சை தொடர்ந்து கோரி வருகின்றோம். ஆனால் எமக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை.
அந்நிலையில் தொடர்ந்து நாமும் எமது குடும்பங்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். வறுமையில் வாடுகின்றோம். அதனால் நாம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை புறக்கணிக்கின்றோம் என தெரிவித்தனர்.
Spread the love