குளோபல் தமிழ் செய்தியாளர்
ரஸ்ய வீர வீராங்கனைகள் குளிர்காலம் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்பது குறித்த தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள 47 வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி மேன்முறையீடு செய்துள்ளனர்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தம்மை பிழையான வகையில் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளதாக வீர, வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். வாழ்நாள் போட்டித் தடை நீக்கப்பட்ட 27 வீர வீராங்கனையும் இதில் உள்ளடங்குகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த வீர வீராங்கனைகளின் மேன்முறையீடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிசீலனை செய்யப்பட உள்ளது.

SOCHI, RUSSIA – FEBRUARY 19: Snow collects on the Olympic Rings during day 12 of the 2014 Sochi Winter Olympics at Laura Cross-country Ski & Biathlon Center on February 19, 2014 in Sochi, Russia. (Photo by Richard Heathcote/Getty Images)