எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் எந்தவொரு தேர்தல்கள் பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
அத்துடன் வாக்காளர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், அந்த நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை ,ந்தக் காலத்தில் செயற்பட வேண்டிய முறை குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இம்முறை ,டம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளுக்காக 65,000 ,ற்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் ,ணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.