ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் கே.டீ. குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு காலப்பகுதியில் வாகன கொள்வனவின் போது ஏற்பட்ட 179 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்படடிருந்தார். இந்தநிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்த போது சந்தேகநபரை ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் கணக்காளர் எல்.பீ. குணரத்னவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.