பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமராக இருந்த காலத்தில் அவரின் பெயரில் இயங்கி வந்த அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் டொலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது 72 வயதான கலிதா ஜியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினருடன் மோதியதாகவும் இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பங்களாதேசின் முன்னாள் பிரதமருக்கு கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
229
Spread the love
previous post