பாகிஸ்தானை சேர்ந்த 3 பேரை உலக பயங்கரவாதிகளாக அறிவித்ததுள்ள அமெரிக்கா அவர்கள் மீது பொருளாதார தடையும் விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ரகுமான் ஜெப் பக்கீர் முகமது, ஹிஸ் உல்லா அஸ்தம்கான், திலாவர் கான் நதிர் கான் ஆகிய முவரையுமே அமெரிக்க அரசின் நிதித்துறை பேரை உலக பயங்கரவாதிகளாக அறிவித்ததுள்ளது
அவர்களுடன் அமெரிக்க குடிமக்கள் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவுடன் தொடர்பு உடைய அவர்களின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டு உள்ளன. லஷ்கர் இ தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் அவர்கள் கொண்டு உள்ள தொடர்பின் நிமித்தமாக உலக பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தெற்காசியாவில், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்போரையும், சட்டவிரோத நிதி அமைப்புகளை நடத்துகிற பயங்கரவாதிகளையும் அமெரிக்க நிதித்துறை தீவிரமாக பின்தொடரும் எனவும் அவர்களை அம்பலப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது