சிரிய அரசாங்கப் படையினர் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியமையினை போர் குற்றம் என அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட சிரிய அரசாங்க ஆதரவு படையினர் கொல்லப்பட்டிருந்ததாக நேற்றையதினம் தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் அமெரிக்கா தாக்குதல்களினால் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சிரிய அரசாங்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சிரிய மனித உரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ள சிரிய வெளியுறவு துறை அமைச்சு அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையை சட்டவிரோதம் எனவும் அதனை கலைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.