அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியின் போது சூதாட்டம் எதுவும் நடைபெறவில்லை என சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடு சபை தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
பேர்த் நகரில் நடைபற்ற இந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியினை அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு அவ்வாறு சூதாட்டம் எதுவும் நடைபெறவில்லை எனவும் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது