குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. உதயங்க தொடர்பிலான விசாரணைகளில் மூன்று அமைச்சர்கள் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்படுகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டள்ளது இதேவேளை, தம்மை டுபாய் அதிகாரிகள் விடுதலை செய்துள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
உதயங்க வீரதுங்க விடுதலை – பேச்சு முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற முடியாது…
Feb 9, 2018 @ 14:17
துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய உறவினருமான, உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இலங்கை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவுறும்வரையில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது