163
சண்டிலிப்பாய் பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர், மானிப்பாய் காவற்துறையினரால், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்ன துண்டுப்பிரசுரங்கள் வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love