குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழில் 62 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாரிய தேர்தல் வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் சிறு சிறு தேர்தல் விதிமுறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்க பெற்றன என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை 04.00 மணியாகும் போது பதிவாகியுள்ள வாக்கு நிலவரங்களின் படி,
கம்பஹா மாவட்டத்தில் 75%, மாத்தளை மாவட்டத்தில் 80%, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 80%, நுவரெலியா மாவட்டத்தில் 60%, பொலன்னறுவை மாவட்டத்தில் 75%, அநுராதபுரம் மாவட்டத்தில் 85%, கிளிநொச்சி மாவட்டத்தில் 60%, வாக்குப்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் 80%, காலி மாவட்டத்தில் 75%, குருநாகல் மாவட்டத்தில் 78%, இரத்தினபுரி மாவட்டத்தில் 60%, கேகாலை மாவட்டத்தில் 70%, கண்டி மாவட்டத்தில் 52%, மாத்தறை மாவட்டத்தில் 70%, திருகோணமலை மாவட்டத்தில் 85%, முல்லைத்தீவு மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதுதவிர மொனராகலை மாவட்டத்தில் 80%, பதுளை மாவட்டத்தில் 65%, புத்தளம் மாவட்டத்தில் 73%, மன்னார் மாவட்டத்தில் 70%, அம்பாறை மாவட்டத்தில் 70%, வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.