157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிங்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. சில உள்ளுராட்சி மன்றங்களை இணைந்து ஆட்சி செய்வது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சிகளை கைப்பற்றுமாறு சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தநிலையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சில உள்ளுராட்சி மன்றங்களில் எவ்வாறு ஆட்சி அமைப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது.
Spread the love