160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தெளிவான செய்தியை மக்கள் வெளியிட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.கோதபாய ராஜபக்ஸ தற்போது அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ள நிலையில் அங்கிருந்து தேர்தல் வெற்றி பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.
2020ம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோதபாய ராஜபக்ஸவே கருதப்படுகின்ற நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களை தொடர்ந்தும் முட்டாளாக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் தாய் நாட்டின் நலனுக்காக தைரியமாக வாக்களித்த அனைவருக்காகவும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love