156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தலைநகர் கொழும்பின் முதல் பெண் மேயராக ரோசி சேனாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி 131353 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு 60 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 60097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 23 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31421 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 12 ஆசனங்களையும், ஜே.வி.பி 14234 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 6 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
Spread the love