குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
என் உள்ளேயும் தமிழ் மற்றும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது. என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பு வைத்துள்ள செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளதாவது ,
எனது அரசியல் யுகப்பயணத்திலே பல ஆண்டுகளாக என்னோடு கைகோர்த்து வெற்றிப் படிகளை அடைய பலம் சேர்த்தவர்கள். மக்களுடைய துன்பங்களே எப்போதும் என்முன்னே பிம்பங்களாக நிழலாடும்.
உங்கள் உணர்வுகளை பிரதிபலிப்பவனாகவும் உன்னதமான உயிரோட்டமான முறையில் தமிழ் மக்களுக்கான எனது சேவை எந்நேரத்திலும் ,எச்சந்தர்ப்பத்திலும் தொடரும் என்பதை இந்த நேரத்தில் கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்
தேசியக்கதைகள் பேசி எமது நேர்த்தியான பயணத்தை திசைதிருப்புவதோடு மட்டுமல்லாமல் தடை கல்லாக இருந்தவர்களுக்கு, இன்று மக்கள் எமக்கு எமது சேவைகளை,எமது உண்மையான உணர்வுகளை புரிந்து இவ் மாபெரும் ஆணையை வழங்கி இருப்பது எமது பயணத்திற்கான அங்கீகாரமே,
நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் சுதந்திர கட்சி சார்பாக எனது தலைமையிலான முதலாவதான பிரவேசத்திலேயே முரணான கருத்துக்களை முறியடித்து புதிய அபிவிருத்தி இலக்குகளை அடைய கூடிய வகையில் மக்கள் தடம் பதியப்பெற்றிருக்கின்றது.
இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலே சுயநலவாதிகளின் எதிர்பார்ப்புக்களை தவிடு பொடியாக்கி பன் மடங்கான ஆதரவை வழங்கியதன் மூலம், எனது தலைமையில் 37 பிரதேச சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எம்மை உங்கள் நிதர்சனமான கண்ணோட்டத்திலே உணர்ந்து உன்னதமான வாக்கை பதிவு செய்திருக்கிறீர்கள்.
எனது செயலாற்றலுக்கு இவை மேலும் உந்துதலை வழங்குகிறது. நிச்சயம் எனது சேவைகளும் உணர்வு ரீதியாக தமிழ் மக்களுக்காக தொடரும் வேளை, சுதந்திரமான தேசிய பயணத்திற்காக ஆணையிட்டு அங்கீகாரம் வழங்கியமைக்கு எனது சேவை செயலாக்கம் பெறும் என உறுதிப்படுத்துகிறேன்
என் உள்ளேயும் தமிழ் மற்றும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது என் அகத்தை அறிந்த நீங்களே மனச்சாட்சியாக வழங்கியுள்ளீர்கள். தேசியம் எனும் போர்வையில் பலர் தடைகளை ஏற்படுத்தியும் சற்றும் தளராது இலட்சியப்பயனத்தில் இணைந்த உங்களினால் அவை சாத்தியமாவதொடு உங்கள் இலக்குகளை நோக்கிய எனது அபிவிருத்தி அம்புகள் இலக்குகளை நோக்கி வெற்றி அம்புகளாக பாயும் என மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.