குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்திற்கு மக்கள் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பணத்தை களவாடியவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கான பலன்களையே தற்போது அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையினாலயே மக்கள் இவ்வாறு சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் களவாடிய எவரையும் தற்போதைய அரசாங்கம் கைது செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் அதுவும் காலம் தாழ்த்தியே தேர்தலுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள், மோசடி செய்தவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் தேர்தல் முடிவுகள் மாறியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.