146
நாட்டில் காணப்படும் நிலையற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவர நாடாளுமன்றை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கிடைத்த வெற்றி ஒரு வரலாற்று வெற்றியாகும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 231 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love