198
ஒஸ்கர் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான லேடி பேர்ட் எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி இந்தியாவில் வெளியாகிறது. இத்திரைப்படம் ஓர் அம்மாவுக்கும் அவரது இளம் மகளுக்குமிடையேயான பாசப்போராட்டத்தை பற்றியதாக அமைந்துள்ளது.
கிரெட்டா கெர்விக் இயக்கிய இத்திரைப்படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் இண்டியா என்ற நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகின்றது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை சாவோய்ர்ஸ் ரோனான், இப்படத்தில் லேடி பேர்ட் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கெர்விக் தனது திரைப்படத்தில் சாவோய்ர்ஸ் ரோனானை நடிக்கவைத்ததுகுறித்து கூறுகையில்,
”நான் 2015ல்தான் சாவோய்ர்ஸ் ரோனானை அவர் புரூக்ளீனில் இருந்தபோது டொராண்டோ திரைப்படவிழாவில் சந்தித்தேன். அவரது ஓட்டல் அறையில் உடன் அமர்ந்து இப்படத்தின் மொத்த திரைக்கதையையும் சத்தம்போட்டு அவருக்கு வாசித்துக் காட்டினேன். அவர் இத்திரைக்கதை குறித்து உடனே, பொஸிட்டிவ்வாக சொன்ன சில வார்த்தைகளை நான் கேட்டேன். சந்தேகத்திற்கு இடமின்றி அவர்தான் எனது திரைக்கதையின் லேடி பேர்ட் என்பதை நான் உணர்ந்தேன். என் கதைக்கு நான் கற்பனை செய்து வைத்திருந்ததை விடவும் அவர் மிகவும் வித்தியாசமாக சிறப்பாக பொருந்தி இருந்தார்.
அவரும் அப்பாத்திரத்தை மிகவும் விரும்பினார். இப்படத்திற்காக தனது நடிப்பை வேடிக்கையாகவும் இதயம் உடையும்விதமான சோகத்தையும் குறிப்பிடத்தக்கவகையில் உலகத் தரத்தில் வழங்கினார். ‘தி க்ரூசிபில்’ படத்திற்கான ஒத்திகைக்கு போய்க்கொண்டிருந்தார். அப்படத்தை ஆறுமாதங்கள் தள்ளிப்போடுவதாகவும் கூறினார். வேறு யாரும் இப்படி செய்யமாட்டார்கள் என தனது இப்படத்தின் நாயகியை பாராட்டுகிறார் இயக்குநர். இந்தத் திரைப்டபத்தில், லாரி மெட்கால்ஃப், ட்ரேசி லெட்ஸ், லூகாஸ் ஹெட்ஜெஸ், டைமோதீ சாலேமேட் மற்றும் லூயிஸ் ஸ்மித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Spread the love