Home இந்தியாபேச்சுப்பயிற்சிக்கு தயாராகும் முத்துவேலு கருணாநிதி – செயற்கை சுவாசக் குழாயும் அகற்றம்!

பேச்சுப்பயிற்சிக்கு தயாராகும் முத்துவேலு கருணாநிதி – செயற்கை சுவாசக் குழாயும் அகற்றம்!

by admin


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேலு கருணாநிதியின் தொண்டையில் பொறுத்தப்பட்ட ட்ரக்யோஸ்டமி குழாய் அகற்றப்பட்டு சிறுகுழாய் பொருத்தப்பட்டுள்ளது. அக் குழாயின் மூலம் கருணாநிதிக்கு பேச்சுப்பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தின் இரண்டு முக்கிய சக்திகளில் ஒருவரான ஜெயலலிதா மறைந்தார். அத்துடன் கருணாநிதி ஓய்வுபெற்றமை காரணமாக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. அத்துடன் மூச்சுத்திணறல் காரணமாக கருணாநிதிக்கு தொண்டையில் செயற்கையாக சுவாசிக்க ட்ரக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது.

இதனால் பேச முடியாத நிலை ஏற்பட்டதுடன் நினைவும் பாதிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஓய்வெடுத்து வந்த கருணாநிதியின் உடல்நிலை தேறி வருகின்றார். நல்ல உடல்நிலையுடன், நினைவும் அனைவரையும் அடையாளம் கண்டுக்கொண்டு விசாரிப்பது, தகவல்களை கேட்டுக்கொள்வது போன்ற நிலையை அவர் அடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

சமீபத்தில் முரசொலி அலுவலகம், அறிவாலயம் சென்ற கருணாநிதி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதேவேளை அண்மையில் பல் சிகிச்சையும், கண் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அவரது உடல்நிலை நலமடைந்து வருவதனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன், அவரது தொண்டையில் பொறுத்தப்பட்டுள்ள குழாய் அகற்றப்பட்டு சிறிய குழாய் பொறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பேசும் பயிற்சியும் எடுக்க இருக்கிறார் கருணாநிதி. தமது கட்சியின் தலைவர் மீண்டும் பழைய கலைஞர் கருணாநிதியாக மீண்டுவார் என்றும் தம்மை சந்தித்துப் பேசுார் என்றும் தி.மு.க தொண்டர்கள் காத்திருப்பதாகவும் தி இந்துப் பத்திரிகை தனது செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More