190
பங்களாதேசுக்கெதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. டாக்காவில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி துடுப்பாடத் தீர்மானித்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களைப் பெற்றது. இதன் பின்னர் 194 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் இலக்கினை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி எதிர்வரும்18ம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love