குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடையாது என உள்துறை அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பிரதமரை ஜனாதிபதியினால் பதவி நீக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்கட்டியுள்ள அவர் நான்கரை ஆண்டுகள் கடக்கும் வரையில் பாராளுமன்றை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களினால் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி அளிக்கப்பட்ட ஆணை தொடர்ந்தும் அமுலில் உள்ளது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மக்கள் வழங்கிய ஆணை வேறுவிதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பிரதமரை ஜனாதிபதியினால் பதவி நீக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்