குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோத குடியேறிகளை பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி ட்ராம்பின் நிர்வாகம் குடிவரவு தொடர்பில் கடுமையான சட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள போதிலும் இளம் குடியேறிகளை பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருகின்றனர்.
சிறுவர்களாக அமெரிக்காவிற்குள் பிரவேசித்து தற்போது இளைஞர்களாகியுள்ள குடியேறிகளை பாதுகாக்கும் நோக்கில் சட்ட யோசனைகளை முன்வைக்கத் திட்டமிடப்பட்டள்ளது குடியரசு கட்சியின் செனட்டர் சூசன் கொலின்ஸ் (Susan Collins) தலைமையிலான செனட் சபை உறுப்பினர்கள் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது