சர்வதேச அளவில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா பிரித்தானியாவை முந்தியுள்ளது சர்வதேச அளவில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகள் பட்டியலில், பிரித்தானியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-ல் இந்திய அரசு ராணுவத்துக்கு சுமார் .36 லட்சம் கோடி ரூபாவினை ஒதுக்கியதாகவும் இது 2016-ம் ஆண் 3.27 லட்சம் கோடி ரூபா அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உலக அளவில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-ம் இடத்தைப் பிடித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு 2016-ல் 3.36 லட்சம் கோடி ரூபாவினை ஒதுக்கிய பிரித்தானியா 2017-ல் 3.24 லட்சம் கோடியாக குறைத்துள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா 2-ம் இடத்திலும் சவுதி அரேபியா 3-ம் இடத்திலும் ரஷ்யா 4-ம் இடத்திலும் உள்ளன. மேலும் இந்திய ராணுவத்தைவிட சீன ராணுவத்தில் கூடுதலாக 6 லட்சம் வீரர்கள் உள்ளனர் எனவும் சீனாவிடம் 1,200 போர் விமானங்கள் உள்ள நிலையில் இந்தியாவிடம் 785 மட்டுமே உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவும் அமெரிக்காவுக்கு சவால் விடவும் சீனா திட்டமிட்டுள்ளது எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.