இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்குழுவில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைவாக இதுவரை காலமும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டு வந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். இ.தொ.காவின் தற்போதையத் தலைவராகவும் செயலாளராகவும் உள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் இந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக மத்திய மாகாண சபை அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல், இன்று காலை இடம்பெற்றபோதே, இ.தொ.காவின் செயற்குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை காலமும் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டு வந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, தான் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு காங்கிரஸின் போசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் பதவிநிலை மாற்றங்கள்…
165
Spread the love