குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து பிரதமர் ரணில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்ட விசேட அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்கால தலைமைக் குழுவொன்றை உருவாக்கும் வகையில் ஐ.தே.க. மறுசீரமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இன்று மாலை விசேட அறிவிப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான அரசியல் பின்னணியில் பிரதமர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் எனும் கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாக விருகின்ற நிலையில் அவரது விசேட அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது