பெப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய ‘ஜூலி’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவரும் இணைந்து ‘எனக்கென யாரும் இல்லையே’, ‘அவளுக்கென்ன’ உள்ளிட்ட பாடல்களைத் தந்திருந்தனர். நான்கு கால் செல்லப்பிராணிகளை விரும்பும் காதலர்களுக்கான பாடல் இது என்று இப் பாடல் ஒளிப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காதலர் தினத்தன்று இந்தப் பாடல் வெளியிடப்பட்டு, ஸ்ட்ரீமிங் தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துக் கூறிய இசையமைப்பாளர் அனிருத் “இது அனைத்து உயிர்களுக்கும் உண்மையான ஒரு பாடலாக இருக்கும். திறமைமிக்க விக்னேஷ் சிவனுடன் பணியாற்றுவது எப்போதுமே அலாதிதான். எனது ரசிகர்கள் ஜூலி பாடலை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.